போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி

போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி

Update: 2023-10-22 13:06 GMT

பல்லடம்,

இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் டெக்ஸ் சிட்டி கிளை, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசாருக்கான மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் டெக்ஸ் சிட்டி கிளை தலைவர் டாக்டர் ஏஜாஸ் அன்சாரி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர் சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த பயிற்சி முகாமில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரண தருவாயில் உள்ளவரை காப்பாற்றுவது, பெரிய விபத்துகளில் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சை பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், டாக்டர் பாலமுரளி, டாக்டர் பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்