காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி
சின்னமனூர் அருகே விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத்தில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. அறிவியல் மையம் மற்றும் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி மையம் இணைந்து இந்த பயிற்சி வகுப்பை நடத்தியது. அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி மைய பேராசிரியர் அழகுநாகேந்திரன், உதவி பேராசிரியர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் தாகூர் நன்றி கூறினார்.