நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் வக்கீல்களுக்கு பயிற்சி

நாகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான முகாமிற்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

Update: 2023-02-14 18:45 GMT


நாகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான முகாமிற்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

விழிப்புணர்வு பயிற்சி முகாம்

நாகை மாவட்ட கோர்ட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் வக்கீல்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாகை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் வைரவநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமார் கலந்து கொண்டு பேசினார்.

நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள், வழக்குகளை பதிவுசெய்தல், பாதுகாப்பற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல் தொடர்பாக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இளம் வக்கீல்கள் பங்கேற்பு

மேலும் மாவட்ட ஆணையங்கள் தங்கள் உத்தரவுகளை மறுஆய்வு செய்தல், நுகர்வோர் தங்கள் புகார்களை மின்னணு அடிப்படையில் தாக்கல் செய்தல், நுகர்வோர் ஆணையங்களில் தங்கள் இருப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்டு புகார்களை தாக்கல் செய்தல் குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் இளம் வக்கீல்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்