தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது;

Update: 2022-12-18 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றியம் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் பாக்கியலட்சுமி வரவேற்றார். பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தொடங்கி வைத்து பேசினார். பயிற்சியில் ஆசிரியர் கம்பன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, ஐசக்ஞானராஜ், சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்றுனர் கவிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்