மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்து வியாபாரிகளுக்கு பயிற்சி

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்து வியாபாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-12-22 18:09 GMT

திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் தொடர்பாக வியாபாரிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் இ-நாம் மொபைல் செயலி வாயிலாக ஆன்லைனில் விவசாய விளைபொருளுக்கான விலையைக் குறிப்பிடுதல், பணம் பட்டுவாடாத் தொகையை வங்கி கணக்கில் நேரடியாக வரவு செய்தல், விளைபொருள்களின் விலையை அறிவித்தல் உள்ளிட்டவைகள் பற்றி சந்தை ஆய்வாளர்கள் சூர்யா, பழனி, பாரதி, சோழன் ஆகியோர் வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

வேலூர் விற்பனைக்குழு செயலாளர் சு.கண்ணன் இ-நாம் திட்டம் பற்றி வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இப்பயிற்சிக் கூட்டத்தில் திருப்பத்தூர் அனைத்து வணிகர் சங்கத் தலைவர் மணி, பலசரக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி, தேங்காய் வணிக சங்கத் தலைவர் பொன்வேல், கரும்பு வெல்ல வியாபாரிகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வியாபாரிகளுக்கு

இ-நாம் செயலி குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. விளைபொருட்களின் வர்த்தகத்திற்று மாநில ஒற்றை உரிமம் பெறுவதன் நன்மைகள் பற்றியும், பொருளீட்டுக்கடன் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் நா.திருமகள், இளநிலை உதவியாளர் சி.ஜோதிராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்