குமரியில் நாளை எழுத்து தேர்வு: தேர்வு மையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சி

குமரியில் நாளை எழுத்து தேர்வு நடக்கிறது. இதையொட்டி தேர்வு மையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-11-25 21:21 GMT

நாகர்கோவில்:

நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குமரி மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 12.40 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை 11,867 பேர் எழுதுகிறார்கள்.

இந்த நிலையில் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பங்கேற்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், "தேர்வன்று விண்ணப்பதாரர்களை காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர்களை தேர்வு மையத்திற்குள் விடக்கூடாது. தேர்வு எழுத வருபவர்கள் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வந்தால், அதை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்