முதலுதவி சிகிச்சை அளிக்க வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி

கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-01-07 18:45 GMT

கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகள்

இந்திய அளவில் சாலை விபத்து அதிகம் நடைபெறும் மாநிலங்க ளில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. மேலும் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக வாகன ஓட்டுனர் உரிமம் பெற வரும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தி லேயே முதல் முறையாக கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து கோவை வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் சிவக்குமார் கூறியதாவது:-

சாலை பாதுகாப்பு விதிகள்

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.

இங்கு ஓட்டுனர், பழகுனர் உரிமம், புதுப்பிப்பு, புதிய வாகன பதிவு என தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படுகிறது.

ஆனால் சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுவது இல்லை.

எனவே தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் உள்ள 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதலுதவி சிகிச்சை

இதில், விபத்தில் சிக்கி காயம், மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி?, காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டுப்போடுவது, ரத்தம் வெளியேறாமல் கட்டுப்படுத்துவது எப்படி? மற்றும் உரிய உபகரணங்கள் மூலம் முதலுதவி குறித்து செய்முறை விளக்கம் அளித்து தன் னார்வ அமைப்பினர் செய்து காண்பித்தனர்.

மேலும் ஆம்பு லன்சுகளை வரவழைப்பது, ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொள் வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் தெரிவித்தனர்.

மேலும் முதலுதவி தொடர்பான வீடியோக்களை காண்பித்தும் விளக்கம் அளிக்கின்றனர். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்