ரிஷிவந்தியம் அருகே நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ரிஷிவந்தியம் அருகே நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-30 16:34 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து ரிஷிவந்தியம் வட்டாரம் ஆற்கவாடி கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (தரட்டுப்பாடு) அன்பழகன் நானோ யூரியா பயன்பாடு குறித்தும், கரும்பு பயிருக்கு வேளாண் சார்ந்த திட்டங்கள், அரசு அளிக்கும் மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். இப்கோ நிறுவன அலுவலர் கோகுல கண்ணன் மற்றும் ஊழியர்கள் டிரோன் எந்திரம் மூலம் கரும்பு பயிருக்கு நானோ யூரியா தெளிக்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர். தொடர்ந்து கரும்பு பயிரில் நாற்று சாகுபடி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் கரும்பு ஆலை மண்டல அலுவலர் குபேந்திரன் மற்றும் சாந்தி ஆகியோர் நிழல் வலைக் கூடம் அமைத்து கரும்பு நாற்று உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம் என விளக்கி பேசினார்கள். மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும்,மண் பரிசோதனை அவசியம் குறித்தும், மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.அப்போது துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் உதவி வேளாண்மை அலுவலர்கள் சேகர், கோபாலகிருஷ்ணன், முகமது நஸ்ருல்லாகான், உதவி தொழில்நுட்ப அலுவலர் மணிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்