உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி

உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-06-27 10:40 GMT

உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை அருகே உள்ள உடையானந்தல் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் ராமநாதன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இதில் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும் நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மூலம் விதை நேர்த்தி நெல் விதையில் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் அனைத்து பயிர்களுக்கான பூச்சி மற்றும் நோய் பற்றியும்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் விவரங்கள் பற்றியும், உழவன் செயலி பதிவிறக்கம், பயன்கள், செயல்பாடுகள் மற்றும் முன்பதிவு செய்வது பற்றியும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குனர்அன்பழகன் பிரதமரின் கவுரவ நிதித் தொகை பற்றியும், அதற்கு புதுப்பிப்பு செய்வது, அங்கக வேளாண்மை மற்றும் நுண்ணீர் பாசனம் பதிவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்