வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் பயிற்சி

போளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-10-17 18:17 GMT

போளூர்

போளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம்  பயிற்சி அளிக்கப்பட்டது.

போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை அறிவியல் மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு பல்வேறு துறையின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் தோட்டக்கலை, மலைப்பயிர் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. போளூரை அடுத்த முருகாபாடி வட்டார நாற்றங்கால் பண்ணையில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் பா.லோகேஷ் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துணை அலுவலர் பா.கன்னியப்பன் முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சி.ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார்.

இதில் மாணவர்களுக்கு பதிகங்கள் செய்யும் முறை, நடவு, மண்புழு உர உற்பத்தி, குழித்தட்டு நாற்று உற்பத்தி போன்ற செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தோட்டக்கலை அலுவலர்கள் எச்.ஜாகிர் பாஷா, வி.சுதாகர் எஸ். முனியன், எம்.சரத்குமார், ஏ.அருள் முருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முடிவில் வட்டார நாற்றங்கால் பண்ணை உதவி தோட்டக்கலை அலுவலர் மா.கோவிந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்