விவசாயிகளுக்கு கரும்பு நாற்று சாகுபடி Training
சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு கரும்பு நாற்று சாகுபடி பயிற்சி
ரிஷிவந்தியம்
அட்மா திட்டத்தின் மூலம் ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் சார்பில் கரும்பு நாற்று சாகுபடி குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி சூளாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். அட்மா திட்ட தலைவர் பத்மநாபன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் சுசிலா பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேளாண் சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன், செம்மை கரும்பு சாகுபடி திட்டத்தில் கரும்பு பயிரில் நாற்று சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பண்ணாரி அம்மன் கரும்பு ஆலை மண்டல அலுவலர்கள் ராஜா, கோவிந்தசாமி ஆகியோர் விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலர்கள் அப்பாஸ், ராமச்சந்திரன், முகமது நஸ்ருல்லாகான், உதவி தொழில்நுட்ப ஆர்வலர்கள் மணிவேல், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.