ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
நீடாமங்கலத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 -ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது, அவர் 8 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்கள் சிறப்பாக கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ந.சம்பத், சு.முத்தமிழன், மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டி.எல். வசந்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ப.சத்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். மாணவர்கள் பொருள் புரிந்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பதற்கும் கணிதத்தின் அடிப்படை செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்பாடுகளை சரியாக செய்வதற்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பயிற்சி கையேடுகளை முழுமையாக பயன்படுத்தி அனைத்து மாணவர்களிடமும் கற்றல் விளைவுகள் முழுமையடைச் செய்ய வேண்டும் என கூறினாா். பயிற்சியில் 102 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.