ஆசிரியர்களுக்கு பயிற்சி
வைத்தீஸ்வரன் கோவிலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் முகாமை தொடங்கி வைத்து பேசினார். இதில், சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜன், வட்டார வள மையத்தை சேர்ந்த ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் குறித்த பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.