ஆசிரியர்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி் அளிக்கப்பட்டது

Update: 2022-06-07 16:59 GMT

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 748 ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாம் வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராசன் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறது. மாணவர்கள் தமிழ், ஆங்கில பாடங்களில் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் மற்றும் கணித பாடத்தில் கணித அடிப்படை செயல்பாடுகளில் சிந்திக்கும் திறனை வளர்க்கவும், வாழ்வியல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு செயல்பாடுகளுடன் கருத்தாளர்கள் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு எளிமையான முறையில் பயிற்சி அளித்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்