நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையம் சார்பில், மக்கள் நீர்நிலைகளில் மூழ்கி உயிர் இழப்பதை தடுப்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் நிலைய அலுவலர் ராமராஜ் மற்றும் குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வருவாய்த்துறையினர், சீவலப்பேரி போலீசார் கலந்து கொண்டனர்.