பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், நிலக்கோட்டையில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-05-03 15:29 GMT

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது குறித்து விழிப்புணவு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நிலக்கோட்டை வட்டார வள மையத்தில் நேற்று பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளமைய பொறுப்பு அலுவலர் கருப்பையா வரவேற்றார். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் டேவிட் ராஜ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பரிமளா, ரமணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் முருகன், அனேசா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அபிராமி, தேவகி, மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்