சங்கராபுரம் ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
சங்கராபுரம் ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 4 மற்றும் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி முகாம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று நடந்த பயிற்சி முகாமுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்பீஹா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் குப்புசாமி வரவேற்றார். பயிற்சி முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன் தொடங்கி வைத்தார். முகாமில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மலர்கொடி, புவனேஸ்வரி, ஸ்டாலின், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 140 ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்தனர்.