ஜெர்மன் மாணவர்களுக்கு பயிற்சி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மாணவர்களுக்கு பயிற்சியை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-13 21:33 GMT

தஞ்சாவூர்;

ஜெர்மனியின் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான கொலோன் பல்கலைக்கழகத்தில் தென் மற்றும் தென்கிழக்காசியக் கல்வி மையத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ் பயின்று வருகின்றனர். அவர்களில் கோடைக்காலப் பயிற்சி முகாமை முன்னிட்டு, இந்தியா வந்துள்ள ஆறு மாணவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் தமிழ் வளர் மையம் மூலம் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பயிலரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான தொடக்கவிழா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழுக்கூடத்தில் நடைபெற்றது. இதில் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் பேராசிரியர் ஸ்வென் வர்ட்மென் தலைமையில் மாணவர்கள் அடங்கிய குழு பங்கேற்றது.தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்வென், . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ் வளர் மைய இயக்குனருமான பேராசிரியர் குறிஞ்சிவேந்தன், தொல்காப்பியர் இருக்கையின் இயக்குனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.4 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிலரங்கில் தமிழ் அடிப்படை இலக்கணம் கற்றல், தமிழ் மரபு சார் மருத்துவம் குறித்த வகுப்பு, ஓலைச்சுவடிகள் குறித்த அறிமுக விளக்கம், தமிழகத்தின் கடல் சார் வரலாறு குறித்த உரை மற்றும் தமிழ் மொழியின் சிறப்புக்கூறுகள் குறித்த வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் பண்பாட்டுப் பயிற்சிகளாக, சிலம்பம், ஒயிலாட்டம், பறையிசை போன்ற கலைகளை மாணவர்கள் கற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்