தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பழனி, அய்யம்பாளையத்தில் தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-04-28 21:00 GMT

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் தென்னை மரங்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா தலைமை தாங்கினார். ஆத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். இதில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி போராசிரியர் வாணி, காந்திகிராம பல்கலைக்கழக விஞ்ஞானி சாகின்தாஜ் ஆகியோர் கலந்துகொண்டு, தென்னை மரங்களை கோடைகாலத்தில் அதிகமாக தாக்கக்கூடிய சுருள் ஈ, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டுகள் மற்றும் வாடல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் பூச்சிகள் எவ்வாறு இருக்கும் என காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் நோய், பூச்சி அறிகுறிகள் உள்ள தென்னைமர தோட்டங்களில் அதிகாரிகள் நேரிடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலெக்சாண்டர், துணை வேளாண்மை அலுவலர் வெங்கடாசலம், உதவி வேளாண்மை அலுவலர் சபரீஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசன்னா, உதவி மேலாளர் வேல்முருகன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பழனி வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பெத்தநாயக்கன்பட்டியில் தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வேளாண் அலுவலர் கவிப்பிரியா தலைமை தாங்கினார். இதில், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்