விவசாயிகளுக்கு பயிற்சி

ஆண்டிப்பட்டி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-02-24 18:45 GMT

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் உள்ளது. இங்கு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம், நெல் விவசாயிகளுக்கு பண்ணை எந்திர மயமாக்குதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண் ஆராய்ச்சி நிலைய வைகை அணை பேராசிரியரும், தலைவருமான மதன்மோகன், பேராசிரியர்கள் பரமேஸ்வரி, சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது எந்திர மயமாக்குதல் மூலம் கால விரயம், செலவினங்கள் குறைந்து தரமான மகசூல் எடுக்க முடியும் என்று கூறினர். இதில் ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், குபேட்டா எந்திர வல்லுனர்கள். வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்