விவசாயிகளுக்கு பயிற்சி
ராதாபுரம் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
ராதாபுரம்:
வேளாண்மை உதவி இயக்குனர் ஜாஸ்மின் லதா அறிவுறுத்தலின்படி, ராதாபுரம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் இளையநயினார்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வேளாண்மை துறையின் திட்டங்கள் மற்றும் உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்து விளக்கி கூறினார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் சரிகா அனைத்து கிராம கலைஞரின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள், தொகுப்பு திடல் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். முன்னோடி விவசாயி சுந்தரம் இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவது குறித்து பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சுபா சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பேசினார். ஏற்பாடுகளை வார்டு உறுப்பினர் சுரேஷ் செய்திருந்தார்.