விவசாயிகளுக்கு சாகுபடி பயிற்சி
தொண்டராம்பட்டில் விவசாயிகளுக்கு சாகுபடி பயிற்சி நடந்தது.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி முகாம் நடைபெற்றது. உழவர் விவாத குழு அமைப்பாளர் சதாசிவம் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது, நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், நெற்பயிரில் உர மேலாண்மை, நெல் வயலில் துத்தநாக சல்பேட்டின் முக்கியத்துவம், நெல் தரிசில் உளுந்து சாகுபடி போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். ஒரத்தநாடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவக்குமார் பேசுகையில், தென்னையில் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்து கூறினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன், ஒரத்தநாடு வட்டார வேளாண்மை உதவி அலுவலர் ஜோசப் ஹில்லாரி, தோட்டக்கலை உதவி அலுவலர் கோபிநாத், ஆகியோர் பல்வேறு சாகுபடி வழிமுறைகள் குறித்து பேசினர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன் சய்திருந்தார்.