காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
பாபநாசத்தில் காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மைய பொறுப்பாளர்களுக்கு சமையல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் ெதாடங்கி வைத்து காலை உணவு பற்றி விளக்கி பேசினார். இதில் கிராம ஊராட்சிகள் (வட்டார வளர்ச்சி)அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், பயிற்றுனர்கள் சங்கரி,குணவதி, வின்சியா ஆகியோர் கலந்து கொண்டு முதல்வரின் காலை உணவு திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் மற்றும் உணவு வழங்கும் முறைகளை குறித்தும் பயிற்சி அளித்தனர். முகாமில் 183 மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தளவாடப் பொருட்களை வழங்கி உணவு சமைக்கும் முறை பற்றி நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது.