வாக்குபதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

இளையான்குடி பேரூராட்சி வார்டு இடைத்தேர்தலையொட்டி வாக்குபதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2022-07-05 19:21 GMT

இளையான்குடி, 

இளையான்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் 13-வது வார்டு உறுப்பினராக இருந்த மிர்சா (தி.மு.க.) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநில தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க., சுயேச்சை என 5 பேர் போட்டியிடுகின்றனர். வருகிற 9-ந்தேதி 13 வார்டுக்கு உட்பட்ட மேலபள்ளிவாசல் தொடக்க பள்ளியில் வாக்குபதிவு நடைபெறுகிறது.

அதற்கு முன்னதாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2-வது பயிற்சி வகுப்புகள் தேர்தல் நடத்தும் அலுவலர் கோபிநாத், உதவி தேர்தல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் நடத்தினர். பயிற்சி முகாமிற்கு இளையான்குடி வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் கந்தசாமி கலந்துகொண்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்