விக்கிரவாண்டியில்ஊராட்சி தலைவர், செயலாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

விக்கிரவாண்டியில் ஊராட்சி தலைவர், செயலாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Update: 2023-07-02 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு ஒற்றை மைய கணக்கு செயலாக்கம் குறித்த பயிற்சி வகுப்பு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்முபாரக் அலி பேக் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். மேலாளர் குணமணி வரவேற்றார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கணினி பொறியாளர் விஜய் ஆனந்த் கலந்து கொண்டு, ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் தொடங்கப்பட்டுள்ள ஒற்றை மைய கணக்கு இயக்குதல், ஆன்லைன் வரி வசூலித்தல், 15 நிதிக்குழு மானியம் குறித்து பயிற்சி அளித்து, அவர்களது சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இதில், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், அனைத்து கிராமங்களில் சுகாதார நடைமுறை பின்பற்றுவது குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமா பிரபா, பாபு, மஞ்சுளா, வீரம்மாள், வாசுதேவ முருகன் உள்பட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்