ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா
நாகை ஆயுத படை மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது.
நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி பேசுகையில்,ஊர்க்காவல் படையினர் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். போலீசாருக்கு நண்பர்களாக இருந்து செயல்படுகின்றனர். அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மண்டல தளபதி ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் திரளான ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர்.