மத்திய அரசு பணியில் சேர பயிற்சி வகுப்பு

மத்திய அரசு பணியில் சேர பயிற்சி வகுப்பு நடந்தது.;

Update: 2023-05-30 18:45 GMT

மத்திய அரசின் எஸ்.எஸ்.சி, ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசின் இந்த பயிற்சி திட்டமானது ஒரு சீரிய முயற்சியாகும். இதுபோன்று மத்திய அரசு பணிகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவிகள் வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், அருண்நேரு மற்றும் திறன்பயிற்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்