ஆங்கில பயிற்சி வகுப்பு
நீடாமங்கலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடந்தது;
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் இலக்குமி விலாச அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பயிற்சி வகுப்பு நடந்தது. இயக்க ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கினாா்். தலைவர் பத்மஸ்ரீராமன், துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெகதீஷ்பாபு வரவேற்றார். சிறப்பு பயிற்சியாளராக முதுகலை பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகரன் கலந்து கொண்டு அடிப்படை ஆங்கில பயிற்சி அளித்தார்.பயிற்சியில் அடிப்படை ஆங்கிலம் உச்சரிப்புடன் பேசுதல், எழுதுதல், தான் மற்றும் தன் குடும்பம் தொடர்பான விவரங்களை படிவத்தில், பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பயிற்சி நடந்தது. பயிற்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.