கிராம குடிநீர் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் கிராம குடிநீர் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-07-24 18:45 GMT

சாயர்புரம்:

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல் ஜீவன் மிஷின் சார்பாக களநீர் பரிசோதனை கருவியை பயன்படுத்தி குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராஜா தலைமை தாங்கினார். துணை நிர்வாக பொறியாளர் ஜான் செல்வன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் நந்தகுமார் வரவேற்றார்.

பயிற்சியில் தண்ணீர் தரம், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சியாளர்கள் விமலா, பூர்ணிமா, முத்துலட்சுமி, வெங்கடேசன், நந்தகுமார் முகுந்தன், விஜய் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி முத்து லட்சுமி, ஊர் நல அலுவலர் சார்லஸ் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை லா.தொண்டு நிறுவனம் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்