கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

செஞ்சியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-09-11 17:26 GMT

செஞ்சி, 

செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டாரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு செஞ்சி தாசில்தார்

நெகருன்னிசா தலைமை தாங்கினார். மேல்மலையனூர் தாசில்தார் அலெக்ஸ்சாண்டர் முன்னிலை வகித்தார். இதில் திண்டிவனம் கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் சக்திவேலு தலைமையிலான ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர். இதில் துணை தாசில்தார்கள் செல்வமூர்த்தி, தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்த்திகேயன், ஏழுமலை புள்ளியியல் ஆய்வாளர்கள் லோகநாதன், வீரபாண்டியன், விமலா, பார்த்திபன், ஏழுமலை மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்