ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

திண்டுக்கல்லில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-06-10 15:02 GMT

திண்டுக்கல் நகர்நல மையம் சார்பில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாளான நடந்த முகாமுக்கு வட்டார கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமை தாங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அமிர்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தொழில் கல்வித்துறை மாநில இணை இயக்குனரும், நகர்நல மைய திண்டுக்கல் மண்டல பொறுப்பு அலுவலருமான ஜெயக்குமார், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் ஆகியோர், பயிற்சியின் நோக்கம் குறித்தும், மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள், ஓவியம் வரைதல், கதை கூறுதல் உள்ளிட்ட பல்வேறு கற்றல் முறைகளை பின்பற்றி எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்