சுகாதார உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

சுகாதார உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-08-05 18:45 GMT

திருப்புவனம், 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல் ஜீவன் மிஷன் சார்பில் கள நீர் பரிசோதனை கருவியை பயன்படுத்தி கிராம குடிநீர் மற்றும் சுகாதார உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மடப்புரம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அய்யணன் வழிகாட்டுதலின்படி சிவகங்கை நிர்வாக பொறியாளர் ராஜாமணி தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் முகாமை தொடக்கி வைத்தார்.

இதையொட்டி சுத்தமான குடிநீர், குடிதண்ணீர் தரம், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, தண்ணீரில் உள்ள ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்து வெங்கடேசன், தனசேகர், சதீஷ்குமார், முருகேஸ்வரி, சிவா, நதிக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில் உதவிப்பொறியாளர் பிருந்தாதேவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தனம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை காளியம்மன் மகளிர் குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்