திருப்புல்லாணி வட்டாரம் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை விவசாயிகளுக்கான செயல் விளக்கம், மானிய விண்ணப்பம் பெறும் முகாம், திட்ட விளக்கம், தொழில் நுட்ப முகாம் இன்று நடக்கிறது. தென்னை விவசாயிகள் கணினி பட்டா, அடங்கல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் மானிய விண்ணப்பங்களை நேரடியாக பெற்று செயல் விளக்க திடல் மானியம் வழங்க உள்ளனர். தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நாளை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. இதேபோல மண்டபம் வட்டார தென்னை விவசாயிகளிடம் இருந்து செயல் விளக்க திடல் மானிய விண்ணப்பங்கள் பெறும் முகாம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்று பண்ணையில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த தகவல்களை திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால் தெரிவித்துள்ளார்.