தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-06-06 18:42 GMT

கரூர்,

தாந்தோணி வட்டத்திற்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ராஜேஷ் மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிறைவு செய்யும் பொருட்டு 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களை வளர்க்கும் பொருட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் உதவி திட்ட அலுவலர் சக்திவேல் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தாந்தோணி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், தாந்தோணி வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்