வேளாண் முன்னேற்ற குழுவுக்கான பயிற்சி முகாம்

மாச்சனூர் ஊராட்சியில் வேளாண் முன்னேற்ற குழுவுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-09 18:48 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 25-ல் இருந்து 30 விவசாயிகள் அடங்கிய வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கான பயிற்சிகள் அந்தந்த கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட மாச்சனூர் ஊராட்சியில் வேளாண் முன்னேற்ற குழுவுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் வினித் மேக்தலின் தலைமை தங்கினார். வேளாண் அறிவியல் நிலைய கால்நடை பேராசிரியர் ராமசாமி, கால்நடை மருத்துவர் நரேந்திரன், உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் பிரீத்தா, வேளாண் விற்பனைத் துறை உதவி அலுவலர் காயத்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண் அலுவலர் ராஜன் வரேவற்றார்.

உழவன் செயலியில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. உழவன் செயலியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களில் முன்னுரிமை தரப்படும் என்றும், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், இடுபொருட்கள், ஒரு குடும்பத்திற்கு இலவசமாக 2 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நிலக்கடலை பயிற்சி, ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்