காலை உணவு திட்ட பயிற்சி முகாம்
தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சமையல் பணி பொறுப்பாளர்களுக்கான சமையல் பயிற்சி முகாம் நடைபெற்றது.;
இளையான்குடி
தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சமையல் பணி பொறுப்பாளர்களுக்கான சமையல் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளையான்குடி இந்திரா நகர் சமுதாய கூட்டத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியை இளையான்குடி வட்டார வளர்ச்சி ஆணையாளர் முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினி தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளையான்குடி வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி, துணை வட்டார அலுவலர்கள் தமயந்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 21 பள்ளிகளில் இருந்து சமையல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு 13 வகையான உணவுகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.