பள்ளி மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-06-16 12:19 GMT

மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சேதுராமன் பயிற்சியினை தொடங்கி வைத்தார். நூலகர் செல்வகுமார், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, நேசக்கரம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பொன்முடி, திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தனர். இதில் ஒரிகாமி காகித மடிப்பு கலை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கணினி ஆசிரியர் ராஜப்பா செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்