பயிற்சி முகாம்
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
விருதுநகர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. விருதுநகர் நகர சபை கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சியினை நகரசபை தலைவர் மாதவன் தொடங்கி வைத்தார். சாத்தூர் நகர சபை தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். பயிற்சியில் மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் பற்றியும், மேலாண்மை குழு உறுப்பினர்களின் கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவசக்தி கணேஷ் குமார் விளக்கமளித்தார். இந்த பயிற்சியில் விருதுநகர் நகராட்சி கமிஷனர் லீனா சைமன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.