வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Update: 2023-03-15 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில்மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வரை வயதுடைய ஆண், பெண் இருபாலருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற ஏதுவாக இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படும் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, அரசு திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் 3 முதல் 6 மாத காலம் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு அரசு நடத்தும் மாபெரும் தொழில் திறன் பயிற்சி முகாம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் விருப்பம் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 8-ம் வகுப்பு முதல் இளநிலை, முதுநிலை, பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல், நர்சிங், ஐ.டி.ஐ. முடித்தவர்கள், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்