மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம்

மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-01 18:45 GMT

கமுதி, 

கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில், யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொணடு பயன் பெற்றனர். நெல், மிளகாய், பருத்தி, சிறுதானிய பயிர்கள் உள்பட அனைத்து பயிர்களுக்கும் ரசாயன உரங்கள் தவிர்க்கப்பட்டு இயற்கை உரங்கள் இட வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மண்புழு உரத்தினால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன இயக்குனர் தமயந்தி முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் வழிமுறைகள் மற்றும் அதற்கான பயிற்சியினை, பயிற்றுனர்கள் ஷியாம்பரணிதரன், ராஜாராம் ஆகியோர் கற்று கொடுத்தனர். மேலும் மண்புழுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இம்முகாமில் தொண்டு நிறுவன நிர்வாகி யோகேஷ்மணிராஜ், மனிதவள மேம்பாடு சபரீஷ், வக்கீல் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்