உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
நீடாமங்கலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சியை ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில் வலங்கைமான், நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்களின் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு வட்டார வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணி சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.