ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு, ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி

உடுமலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு, ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் 9 மையங்களில் நடந்தது.

Update: 2022-12-03 17:36 GMT

உடுமலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு, ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் 9 மையங்களில் நடந்தது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆகியவற்றின் மூலமாக ஆசிரியர்களுக்கு 2022-2023-ம் ஆண்டில் கற்பித்தலுக்கான பல்வேறு தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உடுமலையை அடுத்த திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது1 முதல் 3-ம் வகுப்பு வரைகற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சார்ந்த ஆங்கில உச்சரிப்பு பயிற்சிவகுப்பும், 4- மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் (ஆங்கில பேச்சுத்திறன்) பயிற்சிவகுப்பும் குறுவளமைய அளவில் நேற்று நடைபெற்றது.

9 பயிற்சி மையங்கள்

இதற்காக உடுமலை குறுவள மையத்திற்குட்பட்ட ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளி, சிவசக்தி காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஜல்லிபட்டி, பூலாங்கிணர், பெரியவாளவாடி, தேவனூர்புதூர், உடுக்கம்பாளையம், எலையமுத்தூர் ஆகிய 9 இடங்களில் உள்ள பள்ளிகளில் பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆங்கில உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைகளைப் பொருள் உணர்ந்து படித்தல், குழுச்செயல்பாடுகள், புதிர்கள், வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கற்பிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மேலும் எமிஸ் வலைதளத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு என்றும், கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாடப் பயிற்சி குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கருத்தாளர்களாக காந்திமதி, சொர்ணம் ஆகியோர் செயல்பட்டனர்.

திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்சரவணகுமார், பயிற்சிகளை பார்வையிட்டு ஆசிரியருக்கும், ஏதுவாளருக்கும் (கற்றல் சூழலை உருவாக்கித்தரும் கருத்தாளர்) உள்ள வேறுபாடுகள், ஓர் ஆசிரியர் எவ்வாறு ஏதுவாளராக மாறுகிறார், ஏதுவாளருக்கான உத்திகள் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். ஆசிரியர் பயிற்றுனர் சிவமணி பயிற்சியை ஒருங்கிணைத்திருந்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்