நாமக்கல்லில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி

நாமக்கல்லில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி நடந்தது.

Update: 2022-08-09 12:14 GMT

நாமக்கல்:

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ், அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உள்ளன.

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சியானது நாமக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்து பேசினார்.

இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, மாநில அளவில் பயிற்சி பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, ஆசிரியர் பயிற்றுனர்கள் தினேஸ்குமார், ராஜா, ஜெகதீஸ் மற்றும் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 15 வட்டார வளமையங்களில் இருந்து 63 ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்