தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்களை மாற்றம் செய்ய வாய்ப்பு

தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்களை மாற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2023-03-27 19:15 GMT

நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் பதிவேற்றம் செய்யப்பட்ட முன்னாள் பயிற்சியாளர்களின் விவரங்களாகிய பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் மாற்றம் இருந்தால் சரி செய்து கொள்ளலாம். இதற்காக www.ncvtmis.gov.in என்ற இணையதள முகவரியில் portal-ல் Profile Grievance-ல் நேரடியாக முன்னாள் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்க இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04365 250129 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்