சென்டிரல்-ரேணிகுண்டா இடையே ரெயில் சோதனை ஓட்டம் - பயணிகளுக்கு தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ரேணிகுண்டா இடையே இன்று ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-09-16 02:13 GMT

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ரேணிகுண்டா இடையே இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டம், பயணிகள் ரெயில்களின் அதிகபட்ச வேகமான 130 கி.மீட்டர் முதல் 145 கி.மீட்டர் வரை இயக்கக்கூடிய வகையில் தண்டவாளம் தகுதியுடன் உள்ளதா? என்பதை கண்டறிய நடைபெறுகிறது.

அதேபோல் மறுமார்க்கமாக மதியம் 12.45 மணியில் இருந்து 2.45 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை-ரேணிகுண்டா ரெயில் பாதைகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மேற்கண்ட நேரங்களில் ரெயில் தண்டவாளத்தை நெருங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்