நெல்லை-தென்காசி இடையே 121 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

நெல்லை-தென்காசி இடையே இன்று 121 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.;

Update: 2023-03-09 16:15 GMT

நெல்லை,

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இடையே 64 கி.மீ. நீளம் கொண்ட ரெயில்வே வழித்தடம், அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 70 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இருப்பு பாதைகள் பலப்படுத்தப்பட்டு 121 கி.மீ. வேகத்தில் இன்று நெல்லை-தென்காசி இடையே ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனிடையே நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்