சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று முதல் ரத்து!
சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.;
சென்னை,
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளது.
இந்த குறிப்பிட்ட பகுதியில் 7 மாதங்களுக்கு மின்சார ரெயில் சேவை இருக்காது. அதேநேரத்தில், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மின்சார ரெயில் சேவை வழக்கம்போல இருக்கும்.
அதே வேளையில், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.