செம்மொழி எக்ஸ்பிரஸ் தாமதமாக வருகை

நீடாமங்கலத்துக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது.

Update: 2023-09-06 19:00 GMT

நீடாமங்கலம்;

கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் காலை சுமார் 6.30 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த ெரயில் நேற்று காலை 7.15 மணிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. இதனால் நீண்ட தொலைவில் இருந்து பயணம் செய்து வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.குறிப்பாக வலங்கைமான், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கால தாமதமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்