ரயிலில் அடிபட்டு கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் சாவு
திருவிடைமருதூர் அருகே ெரயிலில் அடிபட்டு கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வடகரை சாரக்குளம் பகுதியைச் சேர்ந்தவா் சுபாஷ். இவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (வயது24). விவசாய கதிர் அடிக்கும் எந்திர டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் நேற்று காலை திருவிடைமருதூர் ெரயில் நிலையத்துக்கும் ஆடுதுறை ெரயில் நிலையத்துக்கும் இடையில் தண்டவாளத்தில் அதிகாலை சென்ற ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் ெரயில்வே போலீசார் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறர்கள்.