ராமேசுவரத்திற்கு சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்
ராமேசுவரத்திற்கு சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.;
பனைக்குளம்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் ராமேசுவரம் வரையிலான சிறப்பு ெரயில்கள் இயக்க தெற்கு ெரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும் வெளியூர்களிலும் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ெரயில்கள் இயக்க தெற்கு ெரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கீழ்க்கண்ட ெரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதத்திற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-ராமேசுவரம், கோவை- பழனி, திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், பெங்களூரு-கோவை, நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம், பாலக்காடு- ராமேசுவரம், சேலம்- ஈரோடு, திருப்பூர், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரம், ஐதராபாத்-ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கமும் சிறப்பு ெரயில்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.